ஈரான் நினைவுச் சின்னத்தின் முன் நடனம் ஆடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

0
240

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச்சின்னமான ஆசாதி கோபுரத்தின் முன் ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக இது பார்க்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி என்பது தெரியவந்தது.

அவர்கள் இருவரும் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். ஈரானில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, பெண்கள் ஆணுடன் சேர்ந்து பொது இடங்களில் நடனமாட அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விதிகளை மீறிய ஜோடி பொது இடத்தில் நடனம் ஆடி உள்ளனர்.

அத்துடன் அந்த பெண் இஸ்லாமிய பெண்கள் அணியவேண்டிய முக்காடு அணியவில்லை. அவர்கள் மீது தெஹ்ரானில் உள்ள புரட்சிகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டத

விசாரணையின் முடிவில் அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கும் ஈரானை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இன்ஸ்டாகிராம் பதிவர்களாக அறியப்படும் இந்த இளம் ஜோடி மீது ஊழல் மற்றும் விபச்சாரத்தை ஊக்குவித்தல் மற்றும் தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இத்தகவலை அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.