உயிரிழந்த இளவரசி டயானா மீண்டும் வந்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்! ஆணித்தரமாக நம்பிய இளவரசர் ஹரி

0
387

மறைந்த இளவரசி டயானா மீண்டும் வந்து தன்னிடம் பேசுவார் என நினைத்ததாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

டயானா திரும்ப வருவார் என நம்பினேன்

தனது நினைவு குறிப்பான Spare-ல் பல விடயங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் தனது தாயார் டயானா இறந்த போது அவர் பின்னாளில் மீண்டும் வருவார் என நினைத்தேன் என ஹரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் திரும்ப வந்து அனைவர் முன்னிலையிலும் பேசி உலகிற்கு அதிர்ச்சி கொடுப்பார் என நினைத்ததாகவும் கூறினார்.

அதன்படி, என் தாயார் நீண்ட ஆண்டுகள் மறைந்திருந்து பின்னர் மீண்டும் வந்து என்னிடம் பேசி என்னை அழைத்து செல்வார் என நம்பினேன். இது குறித்து இரவில் எனக்கு நீண்ட கனவு கூட வந்துள்ளது.

காட்சிகள் மற்றும் உடைகள் சற்று வித்தியாசமாக இருந்தாலும் அவை அடிப்படையில் ஒரே மாதிரியாக இருந்தன. பொன்னிற விக் அல்லது பெரிய கருப்பு சன்கிளாஸ்கள் அணிந்தபடி எனக்கு தெரிவார். ஆனாலும் நான் டயானாவை அடையாளம் கண்டுகொள்வேன். அருகே சென்று அம்மா நீங்களா? என கேட்பேன் என கூறியுள்ளார்.