யாழ் வந்த றிசாட் பதியுதீன் வெளியிட்ட கருத்து!

0
317

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற உறுதியான நிலைப்பாடுகள் உரிய தரப்பினரால் தெரிவிக்கப்படவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

எனினும் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் தமது நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளதாகவும் எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமுமே இதற்கான பதிலை வழங்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் தங்கள் கட்சியினால் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் எனவே இம்முறையும் தமது கட்சிக்கான வெற்றிவாப்புகள் காணப்படுவதாக றிசாட் பதியுதீன் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.