வட இந்திய பக்கம் இருந்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி உச்சம் அடைந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஹன்சிகா. இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் நடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அதன்பின், விஜய், சூர்யா, விஷால், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்தார். இடையில் சிம்புவுடன் காதல் மற்றும் தோல்வி, உடல் எடையை அதிகமானதால் படவாய்ப்பில்லாமல் இருந்தார்.
அதன்பின் சில ஆண்டுகளுக்கு பின் உடல் எடையை முற்றிலும் குறைத்து கிளாமர் ரூட்டுக்கு மீண்டும் மாறி படங்களில் நடித்தும் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் சோஹைல் என்பவருக்கும் ஹன்சிகாவுக்கு பிரம்மாண்ட அரண்மனையில் திருமணம் நடைபெற்றது. கணவருடன் சில காலம் ஹனிமூனுக்கு சென்று திரும்பிய ஹன்சிகா மீண்டும் இணையத்தில் அக்டிவாகினார்.
அப்படி திருமணத்திற்கு பின்பும் உச்சக்கட்ட கிளாமரில் அட்டை விளம்பரத்திற்காக போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.