முதல் முறையாக பூமியை நெருங்கும் பச்சை நிற வால் நட்சத்திரம்!

0
384

50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால்நட்சத்திரத்தை வானியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர்.

இந்த நீண்டகால வால்மீன் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மவுண்டுபலோமேரில் சுவிக்கிடிரான்சியன்ட் பெசிலிட்டி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் காலம் 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு தற்போது இந்த வால்மீன் பூமி சுற்றுவட்ட பாதையில் வருகின்றது.

முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரம்! | Green Comet Approaching Earth For The First Time

கடந்த டிசம்பர் 2022-ம் ஆண்டு முதல் பிரகாசமாக தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஜனவரி மாதத்தில் மிகவும் அருகில் நெருங்கி வருகின்றது.

இந்த வால்மீனை வெறும் கண்ணால் பார்க்கலாம். கடந்த ஜனவரி 12-ம் திகதி சூரியனில் இருந்து பெரிகோலினை கடந்து பூமி வட்டபாதையில் செல்லும் வால் நட்சத்திரம் பெப்ரவரி 1-ம் திகதி பூமிக்கு அருகே நெருங்கி வரும். 50 ஆயிரம் வருடங்களுக்கு பிறகு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

நாசாவின் கூற்றுப்படி, வடக்கு அரைக்கோளத்தில், பச்சை வால் நட்சத்திரம் ஜனவரி பிற்பகுதியில் விடியற்காலையில் தென்படும். வடக்கு அரைக்கோளத்தில் உள்ள வால் நட்சத்திரத்தை பார்ப்பதற்கான கடைசி சிறந்த வாய்ப்பு ஜனவரி 30.

அப்போது போலரிஸ், நார்த் ஸ்டாரின் முடிவிற்கு இடையில் தெரியும். பின்னர் பெப்ரவரி தொடக்கத்தில், வால்மீன் தெற்கு அரைக்கோளத்தில் தெரியும் என்று நாசா தெரிவித்துள்ளது.