காதலியின் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய ரொனால்டோ! வெளியிட்ட புகைப்படம்

0
380

தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படத்தை ரொனால்டோவின் காதலி வெளியிட்டுள்ளார்.

காதலியின் பிறந்தநாள்

போர்த்துக்கலின் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2016ஆம் ஆண்டில் இருந்து ஜியார்ஜினா ரோட்ரிகஸுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.

அல் நஸர் அணியில் இணைந்ததைத் தொடர்ந்து சவுதி அரேபிய தலைநகருக்கு தன் குடும்பத்துடன் சென்ற ரொனால்டோ அங்கு மகிழ்ச்சியாக பொழுதினை கழித்தார். இந்த நிலையில் தனது காதலி ஜியார்ஜினாவின் 29வது பிறந்தநாளை ரொனால்டோ கொண்டாடினார்.

விமர்சியான கொண்டாட்டம்

சொகுசு ஹொட்டல் ஒன்றிற்கு காதல் ஜோடி சென்றது. அங்கு அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை ஒன்றின் பாதை, ஜியார்ஜினாவின் புகைப்படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஜியார்ஜினா/Georgina

காதல் உணர்வை சேர்க்க அறை மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒரு பெரிய வெள்ளை பூங்கொத்துடன் ரோட்ரிகஸ் வரவேற்கப்பட்டார். இசைக்கருவிகள் ஒலிக்கப்பட்டு ஜியார்ஜினாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் வெகுவிமர்சியாக நடைபெற்றது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து ரொனால்டோ மற்றும் ஜியார்ஜினாவின் ரசிகர்கள், உணவகத்திற்கு வெளியே தம்பதியை உற்சாகப்படுத்த கூடினர். தன் காதலர் மற்றும் பிள்ளைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் ஜியார்ஜினா வெளியிட்டுள்ளார்.