தாடி பாலாஜி மனைவி திடீர் கைது! இவ்வளவு மோசமாக நடந்து கொள்வாரா?

0
331

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததுடன் அவரைக் கைது செய்துள்ளனர்.

தாடி பாலாஜி 

தமிழில் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தாடி பாலாஜி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

இவருடன் இவரது மனைவி நித்யாவும் கலந்து கொண்ட நிலையில், இருவரும் இந்நிகழ்ச்சிக்கு பின்பு சேர்ந்து வாழ்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக ரசிகர்களிடம் இருந்தது.

ஆம் தாடி பாலாஜி தனது மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து போரினர். பின்பு அதிகமான சர்ச்சையில் சிக்கிய தாடி பாலாஜி ஒருவழியாக அதிலிருந்து சற்று மீண்டு வந்தார்.

ஆனால் மனைவி மற்றும் குழந்தை இல்லாமல் தனியாக வாழ்ந்து வருவதுடன், பிரபல ரிவியில் நடுவராகவும் இருந்து வருகின்றனர்.

தாடி பாலாஜி மனைவி திடீர் கைது! இவ்வளவு மோசமாக நடந்து கொள்வாரா? | Thadi Balaji Wife Nithya Arrest

மனைவி நித்யா

பாலாஜியின் மனைவி நித்யா, சென்னை , மாதவரம் சாஸ்திரி நகர், எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வரும் நியைில், இவரது வீட்டின் எதிர்புறம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் வசித்து வருகின்றார்.

இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், கோபமடைந்த நித்யா நேற்று நள்ளிரவில் எதிர்வீட்டு உரிமையாளரின் காரை கல்லால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார்.

தாடி பாலாஜி மனைவி திடீர் கைது! இவ்வளவு மோசமாக நடந்து கொள்வாரா? | Thadi Balaji Wife Nithya Arrest

இதையடுத்து காலை எழுந்து பார்க்கையில் தனது கார் சேதமாகியிருந்தது உரிமையாளருக்கு தெரியவந்த நிலையில், சிசிடிவி காட்சியினை ஆய்வு செய்துள்ளார்.

அப்போது நித்யா, நேற்று இரவு கூரிய கல்லை கொண்டு அவரது கார் அருகே சென்றதும், காரில் கீறல் போட்டதும், மேலும் கார் கண்ணாடியை அடித்து உடைத்ததும் அதில் பதிவகையிருந்தது.

இதனால் அவர் கொடுத்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்ட நித்யா, தற்போது காவல்நிலையத்தில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளார்.