விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் பிக்பாஸ் அசீம் வெளியிட்ட பதிவு!

0
531

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரம்மாண்டமாக முடிந்துள்ளது.

21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள்.

விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் திடீரென பிக்பாஸ் அசீம் வெளியிட்ட பதிவு! | Bear The Criticism Bigg Boss Aseem A Post

மேலும் இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள்.

முதல் பட்டத்தை வென்ற அசீமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டது.

விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் திடீரென பிக்பாஸ் அசீம் வெளியிட்ட பதிவு! | Bear The Criticism Bigg Boss Aseem A Post

இதேவேளை சீசன் 6யில் விக்ரமன்தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக்பாஸில் வென்று விடலாமா என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் திடீரென பிக்பாஸ் அசீம் வெளியிட்ட பதிவு! | Bear The Criticism Bigg Boss Aseem A Post

இவ்வாறான நிலையில், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்துள்ளனர்.

இவ்வாறு இருக்கையில் அசீம் வெற்றிக்கு அதே சீசனில் விளையாடிய போட்டியாளர்களும் தவறு எனக் கூறிய நிலையில் தற்போது அசீம் இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில்….“எம் மக்களுக்கு வணக்கம்… சிலர் தோல்வியை தாங்க முடியாமல் பேசுவதை நாம் பொருட்படுத்த வேண்டாம். நம்மை நோக்கி சுமத்தப்படும் விமர்சனங்கள் வெறும் சொற்கள் தானே தவிர நம்மை தாக்கும் கற்கள் அல்ல. அதை படிக்கல்லாக பயன்படுத்தி நம் இலக்கை அடைவோம். நம் இலக்கை அடைவோம். நாம் செய்யப்போகும் நற்செயல்கள் பல!! நன்றி…” என பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பல விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

Gallery