புதிய வரி அறவீட்டுக்கு எதிர்ப்பு; கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

0
389

அரசாங்கத்தின் புதிய வரி அறவீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களினால் ‘கறுப்பு வாரம்’ முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்று (ஜன 27) கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கறுப்பு வாரத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய வங்கி, அரச மற்றும் தனியார் வங்கிகள், துறைமுகம் ஆகிய பிரிவுகளில் ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, அநுராதபுரம், புத்தளம், நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய வரி அறவீட்டுக்கு எதிர்ப்பு; கொழும்பில் ஆர்ப்பாட்டம்(Photos) | Opposition To New Tax Reform