விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் அமைச்சர் ஜீவன் வேண்டுகோள்!

0
161

நுவரெலியா – நானுஓயாவில் பஸ், வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன், கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் அமைச்சர் ஜீவன் விடுத்த கோரிக்கை! | Minister Jeevan Request Died Nuwara Eliya Accident

இதேவேளை, வேனில் 9 பேர் இருந்ததாகவும் 2 பேரே உயிர் பிழைத்ததாகவும் அவர் கூறுகிறார்.

இவ்வாறான நிலையில், “தயவுசெய்து விபத்து/பாதிக்கப்பட்டவர்களின் கவலைதரும் வீடியோக்களை குடும்பத்தை மதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் மற்றும் பரப்ப வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பம் ஹட்டன் டிக்கோயாவைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தயவு செய்து குடும்பத்தின் சூழ்நிலையில் கொஞ்சம் அனுதாபமும் மரியாதையும் காட்டுங்கள் என நுவரெலியா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பின்னர் அமைச்சர் தொண்டமான் டுவிட்டரில் காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளார்.