ஓராண்டாக நித்திரையில் இருந்த நபர்… கண் விழித்ததும் கைதாகினார்!

0
765

சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபர், அரிதான உடல் நிலையால் ஓராண்டு காலம் தூங்கிய நிலையில், கண்விழித்ததும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆழ்ந்த தூக்கத்திலான கைதி

சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியவர் 28 வயதான அஹ்மத் அலி. ஆனால் தாம் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் கூறி, விளக்கமளிக்க முயன்ற நிலையில் திடீரென்று அவர் ஆழ்ந்த தூக்கத்திலானார்.

அதன் பின்னர் அவரால் பதிலளிக்க முடியாமல் போனது. ரோம் நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள விமான நிலையத்தில் வைத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அஹ்மத் அலி கைது செய்யப்பட்டார்.

ஓராண்டாக தூங்கிப் போன நபர்... கண் விழித்ததும் சிறையில் தள்ளிய நீதிமன்றம்: அவர் செய்த குற்றம்? | Rapist Fell Asleep Due To Rare Condition

சிறார் துஸ்பிரயோக வழக்கில் அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அலி பாகிஸ்தான் நாட்டவர் என கருதிய இத்தாலிய நீதிபதிகள், அவர் சுய நினைவற்ற நிலையில் இருந்தாலும், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

நீதிமன்ற விசாரணை

இதனால் மருத்துவமனைக்கும் சிறைக்கும் என அலி தொடர்ந்து பயணப்பட்டு வந்துள்ளார். மேலும், நீதிமன்ற விசாரணையை காணொளி வாயிலாக எதிர்கொண்டார், ஆனால் அவரால் பதிலளிக்க மட்டும் முடியாமல் போனது.

நீதிமன்றத்தில் மருத்துவர்கள் அளித்த விளக்கத்தில் அவருக்கு அரிதான உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், அலியின் சட்டத்தரணியும் தமது கட்சிக்காரரால் விசாரணையில் கலந்துகொள்ள முடியாது நிலை எனவும் வாதிட்டுள்ளார்.

ஓராண்டாக தூங்கிப் போன நபர்... கண் விழித்ததும் சிறையில் தள்ளிய நீதிமன்றம்: அவர் செய்த குற்றம்? | Rapist Fell Asleep Due To Rare Condition

இந்த நிலையில் டிசம்பர் 9ம் திகதி திடீரென்று அலி விழித்துக்கொள்ள, உடனையே அவரை சிறையிலடைத்துள்ளனர். அவர் தொடர்பான விசாரணை ஜனவரியில் துவங்க உள்ளது. அலி நீண்ட தூக்கத்தில் இருந்து கண்விழித்துள்ளது மருத்துவர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி எனவும் அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.