தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை; அங்கஜன் இராமநாதன்

0
292

பிரதேசசபை தேர்தல் நீண்ட காலமாக நடத்தப்படாமல் உள்ளது, இந்த நேரத்தில் மக்கள் ஏதோ ஒரு வகையில் அவர்களது அபிப்பிராயங்களை கேட்க வேண்டிய சந்தர்ப்பம் வந்துவிட்டது என  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் மைதான திறப்பு விழா நேற்று (21.12.2022) நடைபெற்ற போது ஊடகங்களுக்கு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தேர்தலை தற்போது நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை.

video source from Lankasri

மாகாண சபை தேர்தல் 

அவர்கள் தேர்தலை பிற்போடுவதற்குரிய வழிமுறைகளையே மேற்கொள்கின்றார்கள். ஜனாதிபதி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல் ஆகியவற்றுக்கு காலம் இருக்கின்ற படியால் பிரதேச சபை தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு வேண்டுகோளை நாங்கள் முன்வைக்க முடியாது.

ஏனெனில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தினால் யாப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து பெரும்பான்மையூடாக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலை பிற்போடுவதிலேயே அரசாங்கம் குறியாக உள்ளது - அங்கஜன் (video) | Govt Bent On Postponing Elections Angajan

ஜனநாயக நாடு

அவரது ஆட்சி நிறைவுறுவதற்கு இரண்டரை வருடங்கள் உள்ளன. இந்த காலம் முடிந்த பின்னர் தேர்தல் வைக்க வேண்டும் என்பது சட்ட ரீதியாக காணப்படுகின்றது.

சட்டம் சொல்கிறது கால எல்லை முடிந்த பின்னர் தான் தேர்தல் வைக்க முடியும் என்று. ஜனநாயக நாட்டில் மக்களுடைய அபிப்பிராயங்களுக்கு செவிசாய்த்து தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். ஆகவே தேர்தலை விரைவில் நடத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.