ஜனவரியில் தொடங்கப்படவுள்ள காங்கேசன்துறை-புதுச்சேரி கப்பல் சேவை..

0
492

யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தையும் தமிழ்நாட்டின் புதுச்சேரியையும் இணைப்பதாக கப்பல் சேவை 2023 ஜனவரியில் தொடங்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த சேவைக்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த பயணிகள் கப்பல் சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்தவும் வாய்ப்பாகவும் அமையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை மற்றும் கொழும்பு

தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலை மற்றும் கொழும்பு வரையும் பின்னர் குறித்த கப்பல் சேவைகள் விஸ்தரிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அதற்கமைய துறைமுகங்களில் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த சேவையின் கீழ் உள்ள கப்பல்கள் 300 முதல் 400 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியவையாக அமையும் எனவும் அமைச்சர் கூறினார். மேலும் இந்த கப்பல் பயணத்திற்கு மூன்றரை மணித்தியாலங்கள் செல்லும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.