குழந்தை போல் மைதானத்தில் பிள்ளைகளுடன் விளையாடிய குரோஷிய அணியின் கேப்டன்!(photos)

0
422

மொராக்கோ அணிக்கு எதிராக வெற்றி பெற்ற குரோஷியா அணி மைதானத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.

குரோஷியா வெற்றி

கத்தார் உலகக்கோப்பை தொடரில் மூன்றாவது இடத்திற்கான போட்டி நேற்று நடந்தது. நடப்புத் தொடரில் சாம்பியன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்பிரிக்க கண்டத்தின் அணியான மொராக்கோ மற்றும் குரோஷியா அணிகள் மோதின.

காலிஃபா சர்வதேச மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் குரோஷியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

கத்தார் உலகக்கோப்பையில் மூன்றாம் இடம்.. பிள்ளைகளுக்கு முத்தமிட்டு விளையாடிய குரோஷிய வீரர்கள் | Croatia Players Celebrates Victory With Children

வெற்றியைக் கொண்டாடிய வீரர்கள்

குரோஷிய அணி வீரர்கள் வெற்றியை கொண்டாடினர். அணியின் கேப்டன் மோட்ரிக் குழந்தை போல் மைதானத்தில் பிள்ளைகளுடன் விளையாடினார்.

அதேபோல் மற்ற வீரர்களும் பிள்ளைகளுக்கு முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுதொடர்பான புகைப்படங்களை ஃபிபா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 