ஜனாதிபதியின் முக்கியஸ்தர்களுடனான திடீர் சந்திப்பு!

0
180

இலங்கையுள்ள மிக முக்கிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பானது நேற்றைய தினம் (06-12-2022) காலை இடம்பெற்றுள்ளது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இராஜதந்திர பிரதிநிதிகளுக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.