பிறப்பிலேயே பார்வையிழந்த காவிந்தியா – 9 ஏ சித்தி பெற்றது எப்பிடி? திறமைக்கு எல்லை இல்லை

0
396

குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த கண் பார்வையற்ற மாணவி ஒருவர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் 9 ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

பிறப்பிலேயே பார்வையிழந்த காவிந்தியா

ஹிமாஷா காவிந்தியா என்ற இந்த மாணவி பிறப்பிலேயே கண் பார்வையிழந்தவர். அனுராதபுரத்தில் பிறந்த இந்த மாணவி சிறுவயதிலேயே எதனையும் புரிந்துக்கொள்ளும் திறமை பெற்றவராக இருந்தார் எனவும் திறமையாக சவாலை வெற்றிக்கொள்வார் என உணர்ந்து அவரது பெற்றோர், அவரை குருணாகல் பிரதேசத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

ஆரம்பத்தில் குருணாகல் சந்தகட விசேட பாடசாலையில் பயின்று வந்த காவிந்தியா, 2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்றதுடன் 173 புள்ளிகளை பெற்றார். இதனையடுத்து பெற்றோர் அவரை குருணாகல் மகிந்த கல்லூரியில் சேர்த்துள்ளனர்.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள காவிந்தயாவின் தாய் கீதானி, “எனது மகள் சாதாரண தரத்தில் படிக்க மிகவும் ஆர்வம் காட்டினார். அது மாத்திரமல்ல பாடசாலையில் சங்கீதமும் கற்றாள். பாடுவதில் அவர் திறமையானவள். பல சான்றிதழ்களை பெற்றுள்ளாள்” எனக் கூறியுள்ளார்.

அதன் பின்னர் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றி காவிந்தியா 9 ஏ சித்திகளை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

சங்கீதத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

கண் பார்வையற்ற மாணவியின் திறமை-9 ஏ சித்திகளை பெற்று சாதனை | A Blind Student S Skill Achievement With 9 A Marks

காவிந்தியாவின் தந்தை அனுர ஹேரத், அவருக்கு பிரவீன் ஹேரத் என்ற சகோதரரும் இருக்கின்றார். சங்கீதத்தில் திறமை கொண்டுள்ள கவிந்தியா 2017 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். இதன் காரணமாக சாதாரண பிள்ளைகள் மத்தியில் காவிந்தியா பிரபலமானார்.

தொடர்ந்து காவிந்தியா பற்றி கூறிய அவரது தாய் கீதானி, “எனது மகள் திறமை இருப்பதால் பெறுமை கொண்டு மகிழ்ச்சியடையவில்லை. எப்போதும் யாருக்காவது உதவ நினைப்பாள். எவராவது துயரத்தில் இருந்தால்,அவளும் துக்கப்படுவாள். மகளின் திறமையை கண்டு நாங்கள் இன்றும் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்” எனக்கூறியுள்ளார்.