மரண தண்டனை ஒழிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பட்டத்து இளவரசர் சல்மான் கூறியுள்ள நிலையில், சவுதி அரேபியாவில் 12 நாட்களில் மட்டும் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில், நாளும் சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, நேற்று மட்டும் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், சிரியா நாட்டவர்கள் நால்வர், பாகிஸ்தானியர்கள் மூவர், ஜோர்டானியர்கள் மூவர், சவுதி நாட்டவர்கள் 7 பேர் என மொத்தம் 17 பேர்கள் கடந்த 12 நாட்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது சர்வதேச நெறிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு முரணானது எனவும் ஐக்கிய நாடுகள் மன்ற மனித உரிமைகள் குழு அச்சம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 138 குற்றவாளிகளுக்கு சவுதி அரேபியா மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.