புடவைக்கு பதில் வேறு ஆடைகளை அணிந்து வந்த ஆசிரியர்கள்

0
48

நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளின் ஆசிரியர்கள் புடவைக்கு பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து இன்று (21) பாடசாலைக்கு வருகை தந்துள்ளனர்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புடவை அணிவதற்கு அதிக செலவாவதன் காரணமாக வேறு உடைகள் அணிவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவ்விடயம் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எந்தவொரு ஆசிரியர் சங்கத்தினதும் அழுத்தத்தினால் ஆசிரியர்கள் குறித்த தீர்மானத்தை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் புடவைக்கு பதில் வேறு ஆடை | Instead Of The Teachers Saree Another Dress

பொது நிர்வாகம் தொடர்பான 5/2022 சுற்றறிக்கையின் பிரகாரம் ஆசிரியர்களின் ஆடை உரிமைக்கு அமைவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் உடையான புடவையை மாற்றுவது தொடர்பில் தாம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கபோவதில்லையென கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.