பசில் நாடு திரும்பியதும் சுற்றுலாத்துறையில் மாற்றம்; உதயங்க வீரதுங்க

0
88

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் நாட்டின் சுற்றுலாத்துறையில் மாற்றம் ஏற்படும் என ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் ராஜபக்சக்களின் உறவினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையில் தற்பொழுது நிலவி வரும் பல்வேறு பிணக்குகளுக்கு பெசிலின் வருகையுடன் தீர்வு காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ரஸ்யாவின் அசுர் எயார் விமான சேவை இலங்கைக்கான விமானப் பயணங்களை ஆரம்பித்திருந்தது.

இந்த விமான சேவை ஆரம்பிப்பு தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதற்கும் உதயங்கவிற்கும் தொடர்பு கிடையாது என தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் உதயங்க இன்றைய தினம் கருத்து வெளியிட்டுள்ளார்.