சட்டவிரோத பயணம்..! நடுக்கடலில் சிக்கியவர்களில் யாழ்மாவட்டத்தை சேர்ந்தோரே அதிகம்..(Photos)

0
545

கடல்வழியாக கனடா செல்லும்போது வியட்னாம் கடற்பரப்பில் படகு மூழ்கும் நிலையில் மீட்கப்பட்ட 306 இலங்கையர்கள் பாதுகாப்பாக வியட்னாம் கொண்டு செல்லப்பட்டுள்ளதான சர்வதேச செய்திகள் தொிவிக்கின்றன.

இந்நிலையில் அந்த படகில் பயணம் செய்தவர்கள் பெரும்பாலானோர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் பிரகாரம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை சேர்ந்த 76 பேர் உள்ளதாக கூறப்படுகின்றது.

சட்டவிரோத பயணம்

கனடாவுக்கு சட்டவிரோத பயணம்; நடுக்கடலில் சிக்கியவர்களில் யாழ்மாவட்டத்தை சேர்ந்தோரே அதிகம்!(Photos) | Illegal Travel To Canada

இவர்கள் மலேசியாவில் இருந்து படகு மூலம் கனடா செல்வதற்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் படகில் ஏறுவதற்கு முன்னர் இருபது லட்சம் ரூபாய்கள் ஒவ்வொரிடமும் வாங்கிய நிலையில் 20 இலட்சம் ரூபா பணம் கனடாவில் வைத்து வழங்க வேண்டும் என தரகர்கள் டீல் பேசியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கனடாவுக்கு சட்டவிரோத பயணம்; நடுக்கடலில் சிக்கியவர்களில் யாழ்மாவட்டத்தை சேர்ந்தோரே அதிகம்!(Photos) | Illegal Travel To Canada

அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருகடியால் அண்மைக்காலமாக இவ்வாறு ஆபத்தான முறையில் சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.