மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு!

0
349

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு இன்று (09.11.2022) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஆவணங்களில் முரண்பாடு

ஆவணங்களில் உள்ள முரண்பாடு காரணமாக குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

எனினும், வழக்கு விசாரணையை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை சிட்னி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சானக சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்தியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழு, குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நீதிமன்றில் நிரூபிக்கும் திறன் தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வெளியாகியுள்ள தகவல்

இவ்வாறான சூழ்நிலையில் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வன்புணர்வு குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குமாறு முறைப்பாடு செய்த பெண் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ்க குணதிலக்க மீது வன்புணர்வு குற்றச்சாட்டு! ஆவணங்களில் முரண்பாடு - இன்று வழக்கு விசாரணை (Video) | Danushka Gunathilaka Case

இருப்பினும் தனுஷ்க குணதிலக்க தரப்பு இணக்கம் தெரிவிக்காமையால் 25,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.