கர்ப்பிணிப் பெண்ணின் உயிரை காவு வாங்கிய விபத்து!

0
502

மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்த துயர சம்பவம் கஹடகஸ்திகிலிய-ரத்மல்கஹா வெவ பிரதான வீதியில் நேற்று (08) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கணவர் படுகாயம்

சம்பவத்தில் உயிரிழந்த 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹடகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணிப்பெண் | Pregnant Woman Tragically Died In An Accident

உயிரிழந்த பெண் கஹடகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணிபுரிகின்றார். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.