பாடசாலை ஆசிரியர்களின் ஆடைகளில் மாற்றமா..! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

0
559

பாடசாலை மாணவர்களின் ஆடைகளிலும், ஆசிரியர்களின் ஆடைகளிலும் எந்தவித மாற்றங்களையும் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கல்வி முறைமை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து ஆசிரியைகள் சேலையையே அணிகின்றனர்.

இஸ்லாமிய ஆசிரியைகள் சேலையை அணிந்து தலைக்கு பர்தாவை அணிகின்றனர். இதுவரை ஆசிரியர்களின் உடை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை.

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களின் ஆடைகளில் மாற்றமா..! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு (Live) | School Students And Teachers Dress Code Sri Lanka

அமைச்சரின் கூற்றை ஆதரித்த பெண்கள்

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சீருடையில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ள போவதில்லை என விவேகானந்தா பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தேன்.

அங்கு வருகை தந்திருந்த 300 முதல் 400 வரையிலான பெண்கள் அதற்கு பாரிய கரகோசத்தினை தந்து ஆதரித்தனர்.

தமிழர்கள், கலாச்சாரம் அழிந்துவிடக் கூடாது என்பதிலும், சேலையே ஆசிரியைகளுக்கான உரிய உடை எனவும் அவர்கள் எடுத்துணர்தினர்.

ஆகையினால் ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உடை முறைமையில் எவ்வித மாற்றங்களும் கொண்டுவரப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

Video source from Lankasri