$750,000 திடீரென வங்கிக் கணக்கில் வரவு: பெரிய அளவில் செலவழித்த இளைஞன்

0
506

அவுஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவரது வங்கிக்கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட 750,000 டொலர் தொகையை மொத்தமாக செலவழித்துள்ள நிலையில் தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கிறார்.

மேற்கு சிட்னியை சேர்ந்தவர் 24 வயதான அப்தெல் காடியா. இவரது கணக்கிலேயே சுமார் 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வரவு வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் இளம் தம்பதி ஒன்று தங்கள் குடியிருப்புக்கு என சேமித்து வைத்திருந்த தொகையை, அது தொடர்பாக அனுப்ப, அதில் தவறான எண்களை பதிவு செய்துள்ளனர்.

இதனாலையே குறித்த தொகை அப்தெல் காடியா வங்கிக் கணக்கில் வரவாகியுள்ளது. இதனையடுத்து இளைஞர் அப்தெல் காடியா அந்த தொகையில் தங்க கட்டிகள், உடைகள் என மொத்தமும் செலவு செய்துள்ளார்.

நீதிமன்ற ஆவணங்களில் கூறப்படும் தகவலில், சுமார் 600,000 டொலர் தொகைக்கு தங்க கட்டிகள் மட்டும் வாங்கியுள்ளார். மேலும், 110,000 டொலர் மதிப்பில் விலையுயர்ந்த நாணயங்களை வாங்கியுள்ளார்.

2020ல் நடந்த இச்சம்பவத்தில் பொலிசாரால் இதுவரை காடியா வாங்கிய தங்க கட்டிகளை பறிமுதல் செய்ய முடியவில்லை என்றே கூறப்படுகிறது. காடியா கைதான பின்னர் பொலிசார் முன்னெடுத்த விசாரணையில் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

இறுதியில், நடந்தவற்றை அவர் ஒப்புக்கொண்டதுடன், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், இரவு 10 முதல் காலை 7 மணி வரையில் குடியிருப்பில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்றே கூறப்படுகிறது.