வயதானவர் என்று கேலி செய்த நிறுவனம்; பெரும் இழப்பீடு பெற்ற பெண்!

0
610

பிரிட்டனில் 50 வயது கடந்த பெண் ஒருவர் இளம் வயது மேலதிகாரி ஒருவரால் வயதை குறிப்பிட்டு அவதூறு பேசிய விவகாரத்தில் பெருந்தொகை இழப்பீடு பெற்றுள்ளார்.

லண்டனில் பிரபல நிறுவனம் ஒன்றில் நிதி நிர்வாகியாக பணியாற்றியவர் தற்போது 57 வயதாகும் Louise McCabe. இவரே தமது வயதைக் குறிப்பிட்டு அவதூறு பேசியதாக கூறி இழப்பீடு பெற்றவர்.

நிர்வாக கூட்டம் ஒன்றில் Louise McCabe மற்றும் அந்த நிறுவனத்தின் 29 வயது தலைவருக்கும் பணித்திறன் தொடர்பில் காரசாரமான விவாதம் ஏற்பட்டுள்ளது. வயதானவர்கள் தற்போதைய தொழில்புரட்சிக்கு தகுதியானவர்கள் அல்ல எனவும், வயதானவர்களுக்கு புதுமையை ஏற்கும் பக்குவம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வயதானவர் என கேலி செய்த நிறுவனத்திடம் பெருந்தொகை இழப்பீடு பெற்ற பெண் | Age Slurs Former Employee Awarded

தொடர்புடைய நிறுவனம் தொடங்கியதில் இருந்தே Louise McCabe அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருவதுடன் பங்குதாரராகவும் உள்ளார். இதனிடையே, Louise McCabe விடுமுறையில் இருந்த போது அவரை இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கியதுடன், இளையோர்களின் குழு ஒன்றை பணிக்கு அமர்த்தவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மட்டுமின்றி, செப்டம்பர் மாதம் அவரை பணியில் இருந்தும் நீக்கினர். இதில் மனமுடைந்த Louise McCabe நீதிமன்றத்தை நாடியுள்ளார். தமது வயதைக் குறிப்பிட்டு அவதூறு பேசியதுடன், பணி நீக்கம் செய்ய அதையே காரணமாக எடுத்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் Louise McCabe பக்கம் சாதகமான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், அவரது உணர்வுகளை காயப்படுத்தியதாக கூறி 20,000 பவுண்டுகள் தொகை உட்பட இழப்பீடாக 125,604 பவுண்டுகள் தொகை அளிக்க குறித்த நிறுவனத்திடம் உத்தரவிட்டுள்ளது. 

https://www.taatastransport.com/