பிக்பாஸின் அடுத்த கவின் – லாஸ்லியா இவங்க தான்… வெளியே வந்தா புருஷன் பொண்டாடியாக தான் போவாங்களோ!

0
6301

பிக்பாஸ் 6 சீசன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அசல் கோளாரை தொடர்ந்து எலிமினேஷ் செய்யப்படும் போட்டியாளர்கள் இவர்கள் தான் என்று நெட்டிசன்கள் சமுகவலைத்தளத்தில் கருத்துக்களை கூறி வருகிறார்.

அதேசமயம் அசல் கோளாரு – நிவி இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் மிட்நைட்டில் கூட நெருக்கமாக இருந்து ரொமான்ஸ் செய்தனர். சீசன் 3ல் கவின் – லாஸ்லியா காதலை விட ரியல் காதலர்களாகவும் 4வது சீசன் அமீர் – பாவ்னி ரெட்டி இருந்து வருகிறார்.

விரைவில் இருவரின் திருமணமும் நடைபெறவிருக்கிறது. இவர்களை போல் அடுத்த காதல் ஜோடிகளாக இருப்பவர் யார் என்று 6வது சீசனை பற்றி நெட்டிசன்கள் யூகித்து வருகிறார்கள். அப்படி மாட்டியிருக்கிறார்கள் ராபர்ட் மாஸ்டர் – ரச்சிதா.

ஆரம்பத்தில் இருந்தே ரச்சிதாவை தன் காதல் வலையில் சிக்க வைக்க போராடி வருகிறார். நேற்றையை சீசனில் கூட சமையல் டீமில் சென்ற ரச்சிதாவை பார்த்து இத்தனை நாள் கஞ்சி குடித்தேன், ரச்சிதா வந்ததால் விதவிதமாக சாப்பிட போகிறேன் என்று கூறியுள்ளார்.

Gallery

இதை வேறு விதமாக புரிந்து கொண்ட ரச்சிதா கஞ்சியே குடிங்க என்று கூறியுள்ளார். இதனால் சாப்பிடாமல் இருந்த ராபர்ட் மாஸ்டரை கரிசனமாக, சாப்பாடு மீது கோபம் காட்டக்கூடாது என்று ரச்சிதா கூறியிருக்கிறார்.

இப்படி ரச்சிதா எல்லோரிடமும் சகஜமாக பழகுவதை தன்னிடம் கூடுதல் அக்கறை காண்பிப்பதாக யோசித்து ரச்சிதா மீது ஈர்த்துள்ளார். இப்படியே போனால் ரச்சிதாவை தன் வலையில் சிக்க வைத்து புருஷன் பொண்டாடியாக தான் வெளியேறுவார்களோ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.