ரிஷி சுனக்கை இஸ்லாமியர் என நினைத்து வாழ்த்து கூறிய கட்சி உறுப்பினர்!

0
360

கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களில் ஒருவரான பாப் சீலி, பிரித்தானிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கை வாழ்த்தும் போது இன்ஷாஅல்லாஹ் (inshallah) என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.

பாப் சீலி(Bob Seely), ரிஷியை(Rishi Sunak) இஸ்லாமியர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாரா அல்லது அவர் பொதுவாகவே பேசும்போது இப்படித்தான் பேசுவாரா என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொருவரோ, ரிஷி (Rishi Sunak) இந்து மதத்தைச் சேர்ந்தவர். கனசர்வேட்டிவ் கட்சியினர் ஒருவர் inshallah என்ற வார்த்தயைப் பயன்படுத்துகிறாரே என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரிஷி சுனக்கை இஸ்லாமியர் என நினைத்து வாழ்த்து கூறிய கட்சி உறுப்பினர்!(Video) | Party Member Congratulated Rishi Sunak Muslim

மறுபுறம் எந்த பிரச்சனையும் இல்லை, பிரித்தானிய பாராளுமன்றம் இந்து ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்லாமிய வார்த்தையை பயன்படுத்துகிறார். விதி விளையாடுகிறது என்று கேலியாக கூறியுள்ளார்.

இந்நிலையில், பாப் சீலி (பாப் சீலி) கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்து, முஸ்லிம் என்ற வித்தியாசம் தெரியாதவர் என்று ஒரு பக்கம் விமர்சனம் செல்ல, மொத்தத்தில் பாப் சீலி (Bob Seely) வைரலாகிவிட்டார்.