டி20யில் முதல் சாதனை படைத்த தமிழன்!

0
579

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் சென்னையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் கார்த்திக் மெய்யப்பன் இன்று சாதனை படைத்துள்ளார்.

அடுத்தடுத்து விக்கெட்

22 அகவையைக் கொண்ட கார்த்திக் உலக கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் இன்று இலங்கை அணிக்கு எதிராக இடம்பெறும் போட்டியில் மூன்று விக்கட்டுக்களை அடுத்தடுத்து கைப்பற்றி ஹெட்ரிக் சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

T20 யில் முதல் சாதனை படைத்த தமிழன்! | Tamilan Who Made The First Record In T20

இது 2022, 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் முதலாவது ஹெட்ரிக் சாதனையாகும். கார்த்திக் 2019 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கட் அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.