போதையிலிருந்து மகனை மீட்க முற்பட்ட பெற்றோர்; நேர்ந்த சோகம்!

0
561

போதையிலிருந்து மகனை மீட்க முயன்ற பெற்றோர் சகோதரி ஆகியோரை மகனுடன் இருந்த இளைஞர் தாக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கொடிகாமம் பாலாவி வடக்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

கொடிகாமம் பாலாவி வடக்குப் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் இரவு நீண்ட நேரமாகியும் மகன் வீட்டுக்கு வராததால் தேடிச் சென்றுள்ளனர்.

பாலாவி வடக்குப் பகுதியில் உள்ள பற்றைக்குள் தமது மகன் இன்னொரு இளைஞருடன் கசிப்பு அருந்தியதைக் கண்டுள்ளனர்.

அதைத் தடுத்து மகனை வீட்டுக்கு அழைத்து வர முற்பட்டவேளை மகனுடன் இருந்த இளைஞர், பெற்றோர், சகோதரி ஆகியோரையும் இரும்புக் கம்பியால் தாக்கியுள்னர்.

தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர், மகன், மகள் ஆகியோர் காயமடைந்தனர்.

கசிப்பு அருந்திய மகனை மீட்க முற்பட்ட பெற்றோருக்கு நேர்ந்த சோகம் | Rescue Their Son Who Drank The Liquor

அத்துடன் தாக்குதலில் ஈடுபட்டவேளை தாக்குதல் மேற்கொண்ட கெற்பேலி மேற்கைச் சேர்ந்த இளைஞரும் காயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதில் 42 வயதான தந்தை, 21 வயதான மகன் மற்றும் 25 வயதான இளைஞர் ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மதுபான விலை அதிகரிப்பின் பின்னர் கெற்பேலி, பாலாவிப் பகுதியிலுள்ள பற்றைக்ளில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதெனவும் உரிய தரப்பினருக்கு முறையிட்டும் பயன் கிடைக்கவில்லை எனவும் அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.