பிளாஸ்டிக் பெட்டியில் குவிந்திருந்த ‘தங்க’ பற்கள்.. உலகையே உலுக்கிய பயங்கரம்!

0
477

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடந்த பல மாதங்களாக தொடர்ந்து போர் நீடித்து வருவது அனைவருக்கும் அறிந்த தகவல் தான்.

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா அந்நாட்டின் ஏரளமான இடங்களை கைப்பற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல் நாளுக்கு நாள் இந்த போர் தீவிரம் அடைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ukraine golden teeths found in russian soldier chamber

ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவாக ரஷ்ய வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைன் நகரம் மற்றும் கிராமங்களையும் உக்ரைன் மீட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்ட இஸியம் என்னும் பகுதியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய புதைவிடம் ஒன்றை உக்ரைன் அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தது கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி இருந்தது.

ukraine golden teeths found in russian soldier chamber

இதனைத் தொடர்ந்து தற்போதும் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்து உக்ரைன் மீட்ட பகுதியில் அவர்களுக்கு காத்திருந்த சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.

ukraine golden teeths found in russian soldier chamber

உக்ரைனில் உள்ள Pisky Radkivski என்ற கிராமத்தில் உக்ரைன் அதிகாரிகள் தற்போது சோதனை ஒன்றை முன்னெடுத்தனர். அங்கே ரஷ்ய வீரர்களால் சித்ரவதை முகாமாக மாற்றப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றையும் கண்டுபிடித்தனர். அங்கே ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. அப்போது பிளாஸ்டிக் பெட்டி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதில் குவியல் குவியலாக தங்கத்திலான பற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், பற்களை பறிக்கும் கருவியும் இதனுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த முகாமில் எதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும் என்றும் கருதப்படுகிறது. அதே போல ரஷ்ய வீரர்கள் கைப்பற்றிய பகுதியில் இருந்து ஏராளமான பொருட்களையும் அவர்கள் ஆக்கிரமித்து சென்றதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றது.

ukraine golden teeths found in russian soldier chamber

மேலும், இந்த முகாமில் இருந்து அலறல் சத்தத்தை அடிக்கடி கேட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் அதிகரிகளிடம் தெரிவித்துள்ளனர். ரஷ்ய வீரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் பெட்டி முழுக்க தங்க பற்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் கடும் பீதியை உண்டு பண்ணி உள்ளது.