உலக சிறுவர் தினத்தில் தெஹிவளை மிருகக்காட்சி சாலை சாதனை!

0
188

இலங்கையில் இந்த வருடம் (2022) நாள் ஒன்றில் அதிகூடிய வருமானத்தை ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்பட்ட உலக சிறுவர் தினத்தில் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஈட்டியுள்ளது.

இதன்படி, 50 லட்சத்து 80 ஆயிரத்து 377 ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

உலக சிறுவர் தினத்தில் மிருகக்காட்சிசாலை செய்த சாதனை! | Sri Lanka Zoo S Achievement World Children S Day

இதற்கு இணையாக ஏனைய சகல மிருகக்காட்சிசாலைகளிலும் நாள் ஒன்றில் அதிகூடிய வருமானம் ஈட்ட முடிந்ததாக விவசாய, வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக சிறுவர் தினத்தில் மிருகக்காட்சிசாலை செய்த சாதனை! | Sri Lanka Zoo S Achievement World Children S Day

இதற்கமைய, பின்னவல யானைகள் சரணாலயத்தில் 9 லட்சத்து 47 ஆயிரம் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

பின்னவல மிருகக்காட்சிசாலையில் ஒன்பது இலட்சத்து 49 ஆயிரத்து 200 ரூபாவும் ரிதியகம சஃபாரி பூங்காவில் எட்டு இலட்சத்து 56 ஆயிரம் ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளன.

உலக சிறுவர் தினத்தில் மிருகக்காட்சிசாலை செய்த சாதனை! | Sri Lanka Zoo S Achievement World Children S Day