துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிர் இழந்த யுவதி; தாயார் வெளியிட்ட தகவல்!

0
386

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு தொடரப்படும் என உயிரிழந்த இளம் பெண்ணின் தாய் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தனது மகள் இரேஷா ஷியாமலிக்கு இழப்பீடு வழங்கக் கோரி எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.

சாலையில் செல்லும் போது இதுபோன்று இன்னொருவர் உயிரிழக்காமல் இருக்க, தன் மகளுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் தான் உள்ளிட்ட அனைவரும் தாங்க முடியாத வேதனையில் இருப்பதாகவும், என்ன செய்தாலும் இறந்த மகளை மீட்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இளம்பெண்; தாயார் வெளியிட்ட தகவல்! | Young Girl Killed In Police Firing By The Mother

பேருந்தில் பயணம் செய்த மகளின் மீது துப்பாக்கிச் சூடு பட்டது குறித்து மன்னிக்கவும் என்று கூறி அனைத்தையும் முடித்து வைக்க பொலிஸார் முயல்வதாகவும், ஆனால் இந்த செயலால் தனது குடும்பத்தினர் வேதனைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது மகளின் இறுதிக் கிரியைகளின் பின்னர் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இரேஷாவின் தாயார் சுனேத்ரா ஜயமான்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இளம்பெண்; தாயார் வெளியிட்ட தகவல்! | Young Girl Killed In Police Firing By The Mother

இதேவேளை, அண்மையில் கொள்ளையர்கள் இருவர் தங்கோவிட்ட நகரில் உள்ள மதுபானசாலையை உடைத்து கொள்ளையிட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது பொலிஸாருடன் பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. அவ்வேளையில், அவ்வீதி ஊடாக அரச பேருந்தில் பயணித்த 29 வயதுடைய பெண்ணொருவரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

29 வயதுடைய இரேஷா ஷியாமலி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்தார்.

அனுராதபுரத்தில் உள்ள ஆலயமொன்றுக்கு சென்று பூஜையில் கலந்து கொண்டு, களனி பிரதேசத்திலுள்ள தனது சகோதரனுடன் பேருந்தில் வீடு திரும்பியபோதே காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அவர் உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான செய்தி

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2022/10/03/a-young-woman-who-lost-her-life-after-being-shot-by-the-police-because-she-missed-the-target/