முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்த்தால் மண்டியிட வேண்டிய நிலை ஏற்படும்!

0
75

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வீழ்த்த முயற்சிப்போர், இறுதியில் அரசியல் ரீதியில் மண்டியிட வேண்டிய நிலை ஏற்படும் என்பதே வரலாறு என ராஜபக்சக்களுக்கு நேர்ந்த கதி இதற்கு சான்றாகும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன், 1956 இற்கு பின்னர், 2 ஆவது விடுதலைப் போராட்டம் சுதந்திரக்கட்சி தலைமையிலேயே ஆரம்பமாகும் எனவும் அவர் சூளுரைத்தார்.

அதேவேளை, ஆட்சியைக் கைப்பற்றும் சக்தியாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் பலமடையும் எனவும் தயாசிறி நம்பிக்கை வெளியிட்டார்.

அரசியல் ரீதியில் மண்டியிட வேண்டிய நிலை ஏற்படும்; தயாசிறி ஜயசேகர! | There Will Political Kneeling Mother Jayasekara