தமிழர் மனதில் இடம் பிடிக்குமா இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் !

0
128

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் திரைப் படமாக எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தமிழர்கள் மனதில் இடம் பிடிக்குமா பொன்னியின் செல்வன் காவிய சினிமா? | Ponni Selvan Epic Movie Find A Place Minds Tamils

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ள இப்படம் தொடர்ந்து பல காட்சிகள் முன்பதிவிலேயே முழுவதும் புக் ஆகியுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

தமிழர்கள் மனதில் இடம் பிடிக்குமா பொன்னியின் செல்வன் காவிய சினிமா? | Ponni Selvan Epic Movie Find A Place Minds Tamils