இலங்கையில் ஒரு குடும்பத்தின் மாதாந்த வாழ்க்கைச் செலவு

0
414
A happy Indian family

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு குடும்பத்தின் வாழ்க்கைச் செலவுகளின் ஆண்டு அதிகரிப்பு வெறும் 2,979.97 ரூபாவாக காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 33,191.74 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுச் செலவுகள்

இதன்படி, கடந்த மாதம் ஒரு குடும்பத்தின் உணவுச் செலவுகள் 749.88 சதவீதம் உயர்ந்து 16,857.74 ரூபாவில் இருந்து 19,105.81 ரூபாவாகவும், உணவு அல்லாத செலவுகள் 1,824.57 சதவீதம் உயர்ந்து 13,354.03 ரூபாவில் இருந்து 14,085.93 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

ஒரு குடும்பத்தின் மாதாந்திர வாழ்க்கைச் செலவுகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Information About Family Monthly Living Expenses

ஒரு குடும்பத்தின் மாதாந்திர உணவு மற்றும் உணவு அல்லாத செலவுகளின் கூட்டு மதிப்பு அவர்களின் மொத்த வாழ்க்கைச் செலவுகளை உருவாக்குகிறது. இதற்கிடையில், 2022ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு குடும்பத்தின் மாதாந்திர செலவு 31,437.17 ரூபாவாகவும் ஜூன் மாதம் 27,588.01 ரூபாவாகவும் காணப்பட்டது.

இதன் விளைவாக, நாடு தழுவிய பணவீக்கம் ஜூலை 2022 இல் 66.6 சதவீதத்தில் இருந்து, கடந்த மாதம் 70.2 சதவீதமாக தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வேகமாக அதிகரித்துள்ளது. மேலும், உணவுப் பணவீக்கம் ஜூலை 2022ல் 82.5 சதவீதமாக இருந்த நிலையில், தொடர்ந்து பதினொன்றாவது மாதமாக கடந்த மாதம் 84.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அத்துடன், உணவுப் பொருள் அல்லாத பணவீக்கம் ஜூலை 2022 இல் 52.4 சதவீதமாக காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 57.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ​​மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.