யாழில் கடிதம் எழுதி வைத்துவிட்டு மூதாட்டி மரணம்!

0
288

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் உள்ள கிணறொன்றிலிருந்து 70 வயதுடைய வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கபட்ட வயோதிப பெண் திருமணம் செய்யாமல் தனியாக வசித்து வந்த நிலையில் அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அவர் உயிரிழப்பதற்கு முன்னர் கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழில் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த வயோதிப் பெண்! | Elderly Woman Died After Writing Letter In Jaffna

உயிரிழந்தவரின் சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.