இளம் பெண்ணின் நேர்மையான செயல் – பலராலும் பாராட்டு!

0
360

நுவரெலியா வாரந்த சந்தைக்கு அருகில் கிடந்த பை ஒன்றை பெற்ற யுவதி ஒருவர் அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

அந்த பையில் ஒரு லட்சத்து 22 இரண்டாயிரத்து 353 ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் வங்கி அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்கள் இருந்துள்ளன.

பணப்பையை எடுத்த யுவதி அதன் உரிமையாளரைக் கண்டுபிடித்து நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

யுவதியின் நேர்மை

நுவரெலியா விவசாய சேவைகள் திணைக்களத்தில் எழுத்தாளராகப் பணிபுரியும் கேப்பிட்டிபொல பிரதேசத்தில் வசிக்கும் கயானி ஜயசேகர என்பவரே நுவரெலியா வாரந்த சந்தை பகுதிக்கு செல்லும் வீதிக்கு அருகில் விழுந்து கிடந்த பணப்பையை எடுத்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணப்பையை சோதனை செய்து அதன் அடையாளத்தை நிரூபித்த போது ​​அது கந்தபொல பிரதேசத்தை சேர்ந்த காஞ்சன லக்மாலி என்பவருடையது என கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிஸார் நடவடிக்கை

காணாமல்போன பணப்பையை கண்டுபிடிக்குமாறு பொலிஸில் முறைப்பாடு செய்ய அதன் உரிமையாளர் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது, ​​நுவரெலியா தலைமையக பொலிஸ் பரிசோதகர் முன்னிலையில் பணப்பையை உரிமையாளரிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் குறித்த யுவதியின் நேர்மைக்கு பொலிஸார் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.