மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு தனது இரண்டரை வருடங்களுக்கான சம்பளம் உள்ளிட்ட ஏனைய அனைத்து கொடுப்பனவுகளையும் மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளார் .
இதற்கமைய கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பெற்றுக்கொண்ட கொடுப்பனவுகள் மற்றும் வேதனத்தை இவ்வாறு மீண்டும் வழங்கவுள்ளதாக அவர் கூறினார்.
மாத்தறை – அக்குரெஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதைஅ குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் விஞ்ஞாபனம்
கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலின் போது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனை குறிப்பிட்டிருந்ததாகவும், அதற்கு இணங்கவே தாம் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் கருணாதாச கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சுமார் 120 இலட்சம் ரூபாவினை மாத்தறை மாவட்டத்தில் இயங்கும் 220 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களுக்காக பகிர்ந்தளிக்க தீர்மானித்துள்ளதாக கருணாதாச கொடித்துவக்கு மேலும் தெரிவித்துள்ளார்.