மங்கலான நீல (dove blue) நிற ஆடை அணிந்து தலைமுடி நேர்த்தியாக சுருட்டப்பட்ட நிலையில் மறைந்த ராணியின் அரசு இறுதிச் சடங்கை முன்னிட்டு உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மகிழ்ச்சியுடன் சிறுக்கும் புதிய உருவப்படத்தை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படம் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மே மாதம் எடுக்கப்பட்டது.
சிரிப்புடன் பிரகாசமாக தோன்றும் ராணி
வின்ட்சர் கோட்டையில் வீட்டில் இருக்கும் போது ராணி சிரிப்புடன் பிரகாசமாக தோன்றுவதை இந்த புகைப்படம் காட்டுகிறது.
ராணி அவருக்கு பிடித்த மூன்று அடுக்கு முத்து நெக்லஸ், முத்து காதணிகள் மற்றும் அவரது அக்வாமரைன் மற்றும் வைர broochesகளுடன் அவர் படம்பிடிக்கப்பட்டுள்ளார்.
பெண்கள் தங்கள் உடையில் மார்புப்பகுதியில் குத்தக்கூடிய இந்த brooches, 1944-ல் ராணியின் 18-வது பிறந்தநாளுக்கு அவரது தந்தை நான்காம் ஜார்ஜ் கொடுத்த பரிசாகும். 2020-ல் Victory in Europe (VE Day) தினத்தின் 75-வது ஆண்டு விழாவில் ராணி உரையாற்றிய போதும் 2012-ல் தனது வைரவிழா தொலைக்காட்சி உரைக்காகவும் இந்த brooches-ஐ அணிந்திருந்தார்.
ராணியின் 70 ஆண்டுகால ஆட்சியின் மைல்கல்லின் தேசிய விழாக்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட ராணியின் ஜூபிலி உருவப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் ரனால்ட் மெக்கெக்னி (Ranald Mackechnie) தான் இந்த படத்தையும் எடுத்தார்.