மில்கோ நிறுவன மோசடி; அதிரடி நடவடிக்கை

0
591

மில்கோ நிறுவனத்திற்கு சொந்தமான அம்பேவெல ஹைலண்ட் தொழிற்சாலையில் 2019 முதல் 2021 வரையிலான மூன்று வருட காலப்பகுதியில் 132,000 லீற்றருக்கும் அதிகமான டீசல் மோசடியான முறையில் வேறொரு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இரண்டு அதிகாரிகளை பணி இடைநிறுத்தம் செய்வதற்கும் மற்றுமொருவரை பொலனறுவைக்கு இடமாற்றம் செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்தார்.

மில்கோ நிறுவன மோசடி; அதிகாரிகள்  தொடர்பில் அதிரடி நடவடிக்கை | Milko Company Fraud

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை

மூன்று அதிகாரிகளைத் தவிர வேறு யாராவது மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என்பதைக் கண்டறியுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரவுள்ளதாக மில்கோ தலைவர் தெரிவித்துள்ளார்.

மில்கோ நிறுவன மோசடி; அதிகாரிகள்  தொடர்பில் அதிரடி நடவடிக்கை | Milko Company Fraud

குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் இந்தக் குற்றச்செயல் நீண்ட காலமாக இரகசியமாகவே இருந்தது என தலைவர் தெரிவித்தார்.

அதிகாரிகள் மோசடி

இந்த மோசடியை மேற்கொள்வதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சில அதிகாரிகளின் உதவி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மில்கோ நிறுவன மோசடி; அதிகாரிகள்  தொடர்பில் அதிரடி நடவடிக்கை | Milko Company Fraud

இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக மில்கோ தலைவர் ரேணுகா பெரேரா மேலும் தெரிவித்தார்.