கடவுச்சீட்டு குறித்து தகவல் !

0
456

ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு முன்கூட்டி திகதிகள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம் சேவை வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக தமது சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு குறித்து முக்கிய தகவல் | Important Information About Passport

அத்துடன் இன்றைய தினம் தேசிய துக்க தினம் என்பதால் குறித்த திணைக்களத்தினால் வழங்கப்படும் ஏனைய சேவைகள் எதுவும் இடம்பெறாது எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.