ரஸ்ய படையினரிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்!

0
72

உக்ரேனில் ரஸ்ய படையினரின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களின் படங்களும் மேலதிக விபரங்களும் வெளியாகியுள்ளன.

உக்ரேன் பத்திரிகையாளர் மரியா ரமனென்கோ படங்களை வெளியிட்டுள்ளதுடன் இலங்கையர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  

ரஸ்ய படையினரினரிடமிருந்து  மீட்கப்பட்ட இலங்கையர்கள் குறித்து வெளியான அதிர்ச்சித்தகவல்! | Sri Lankans Rescued From Russian

இலங்கையர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள்

இலங்கையர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் அவர்களது நகங்கள் பிடுங்கப்பட்டன ரஸ்யர்களிற்காக வேலைபார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என பொலிஸ் அதிகாரிகளை மேற்கோள்காட்டி உக்ரேன் பத்திரிகையாளர் செய்தி வெளியிட்டுள்ளார்.

ரஸ்ய படையினரினரிடமிருந்து  மீட்கப்பட்ட இலங்கையர்கள் குறித்து வெளியான அதிர்ச்சித்தகவல்! | Sri Lankans Rescued From Russian

இலங்கையை சேர்ந்த ஆறு ஆண்களும் பெண்ணொருவரும் உக்ரைன் மீதான போர் ஆரம்பமாவதற்கு மூன்று வாரங்களிற்கு முன்னரே கல்வி தொழிலிற்காக உக்ரேன் வந்தனர் என தெரிவித்துள்ள உக்ரேன் பத்திரிகையாளர், சில நாட்கள்வரை ரஷ்ய படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்த குப்பியான்ஸ்கிலில் அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.