கோழி இறைச்சியின் புதிய விலை இதோ !

0
315

தோலுடன் கோழி இறைச்சியின்  புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி தோலுடன் 1 கிலோகிராம் கோழி இறைச்சி இன்று (19) முதல் ரூபா 1300 முதல் 1350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சியின்  புதிய விலை  இதோ! | Fresh Price Of Frozen Chicken With Skin

உள்ளூர் சந்தைக்கு தொடர்ச்சியாக கோழிப் பொருட்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அதன் உறுப்பினர்கள் இன்று கூடவுள்ளதாக அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

கால்நடை தீவனம் கிடைத்தால் கோழி உற்பத்தி செலவை குறைக்க முடியும் என அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.