சத்தமின்றி ஆரம்பமான 3ஆம் உலகப் போர்; நெருக்கடியில் உலகநாடுகள்

0
789

கொரோனா தொற்றினால் முடங்கிய உலக நாடுகள் முடங்கியிருந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் போரால் உலக நாடுகள் மேலும் நெருக்கடியினை எதிர்நோக்கி வருகின்றன.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி மேற்கொண்டதன் விளைவாக ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை நடத்த தொடங்கிய நிலையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக யுத்தம் முடிவுக்கு வராது நீடித்து கொண்டிருக்கின்றது.

இதில் உக்ரைன் சின்னாபின்னமாகியதுடன் பேரழிவையும் சந்தித்தது. போர் காரணமாக உக்ரைன் மக்கள் பெருமளவானோர் நாட்டைவிட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

சத்தமில்லாது ஆரம்பமான  3ஆம் உலகப் போர்; நெருக்கடியில் உலகநாடுகள் | World War3 Began Without Noise

ஓரணியில் திரண்ட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுதங்களை வாரி வழங்கி வருவதுடன் மேற்கத்திய நாடுகளின் முன்னாள் ராணுவ தளபதிகள், வீரர்கள் உக்ரைனில் முகாமிட்டு ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.

இந்த போரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாகவும் ரஷ்யா எதிரணியாகவும் போரில் ஈடுபட்டுள்ளன. இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் நடுநிலை வகித்து வருகின்றன.

சத்தமில்லாது ஆரம்பமான  3ஆம் உலகப் போர்; நெருக்கடியில் உலகநாடுகள் | World War3 Began Without Noise

ரஷ்யாவை விழ்த்தும் உக்ரைன்

போரில் ஆரம்ப காலம் முதலே ரஷ்யாவின் கை ஓங்கி இருக்கிறது. உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 80 சதவீத பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது.

சத்தமில்லாது ஆரம்பமான  3ஆம் உலகப் போர்; நெருக்கடியில் உலகநாடுகள் | World War3 Began Without Noise

இந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக கார்கிவ் பகுதியில் உக்ரைன் ராணுவம் முன்னேறி வருவதாகவும் ரஷ்ய ராணுவம் பின்வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்ய வீரர்கள் ஆயுதங்களை கைவிட்டு தப்பியோடிவிட்டதாக உக்ரைன் அரசு கூறி வரும் நிலையில் சத்தமில்லாது 3ஆம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.