அக்கா – தங்கையின் உயிரை பறித்த விபத்து!

0
217

மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லொறி மோதியதில் தந்தையுடன் பாடசாலைக்கு சென்ற அக்கா – தங்கை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி, இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு 16 வயதில் ஜெயஸ்ரீ, மற்றும் 12 வயதில் வர்ஷாஸ்ரீ என 2 மகள்கள் இருந்தனர்.

ஆம்பூர் புதுகோவிந்தாபுரம் பகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் ஜெயஸ்ரீ பிளஸ்-1, வர்ஷாஸ்ரீ 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று காலை தண்டபாணி தனது மகள்கள் இருவரையும் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் சென்றார்.

ஆம்பூர் O.N.R திரையரங்கத்திற்கு அருகே சென்ற போது ஓசூரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லொறி திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தண்டபாணி மோட்டார் சைக்கிள் மீது மோதி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீதும் மோதி சர்வீஸ் சாலையில் புகுந்தது.

அக்கா - தங்கையின் உயிரை பறித்துச் சென்ற கோர விபத்து! | Ambur Motorcycle Lorry Accident Two Students Died

அப்போது லொறியில் இருந்த கன்டெய்னர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லொறியின் சக்கரங்கள் ஜெயஸ்ரீ, வர்ஷா ஸ்ரீ ஆகியோர் மீது ஏறியதில் அவர்கள் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தண்டபாணி படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி சென்னையை சேர்ந்த ஜார்ஜ் ஜெயசீலன் (35) என்பவரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.