இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் சீனா!

0
338

இலங்கைக்கு ஆதரவு வழங்கப்படும் என ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி Chen Xu தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கைக்கு பாராட்டு

அத்துடன் நல்லிணக்கத்தை பாதுகாக்க இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை சீனா பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சமூக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு பலமான ஆதரவு வழங்கப்படும் என சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி Chen Xu மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் சீனா! | China Is Sticking Its Nose In The Sri Lanka Issue