சார்ஜர் இல்லாமல் ஐபோனை விற்ற ஆப்பிள் நிறுவனத்திற்கு பிரேசில் ரூ.19 கோடி அபராதம்

0
622

சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை செய்ததற்கு ஆப்பிளுக்கு சுமார் 19 கோடி ரூபாய் பிரேசில் அபராதம் விதித்துள்ளது.

ஐபோன் வாடிக்கையாளர்கள் தனியாக சார்ஜரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு போனுடனும் சார்ஜர் அளிப்பதால் எண்ணிக்கை அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் இருப்பதாலேயே வழங்குவதில்லை என ஆப்பிள் தெரிவித்து வருகிறது.

எனினும் சார்ஜருடன் மட்டுமே செல்போன் விற்க வேண்டுமென பிரேசில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, சாம்சங் தனது புதிய போன்களில் சார்ஜரையும் சேர்த்து விற்று வருகிறது.

ஆனால் ஆப்பிள் நிறுவனம் சார்ஜர் இல்லாமல் ஐபோன் 12 மாடலை அறிமுகப்படுத்தியது.

இதையடுத்து சார்ஜர் இல்லாத அனைத்து ஐபோன்களின் விற்பனைக்கும் பிரேசில் அரசு இடைக்கால தடை விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.