வெளிநாட்டிலிருந்து வந்த நபரால் யாழில் பல மில்லியன் கணக்கில் இழப்புக்களை சந்தித்த ஹோட்டல்

0
503

வெளிநாட்டிலிருந்து வந்த நபர் ஒருவரின் மிக மோசமான செயலினால் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று இரண்டு மில்லியன்களுக்கும் அதிகமான சொத்துக்களை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த நபர் ஒருவர் தினமும் மது போதையில் அடாவடி தனத்தில் ஈடுபட்டதாகவும் அடிக்கடி அங்கிருப்பவர்களுடன் பிரச்சினைகளில் ஈடுபட்டதாகவும் தெரியவந்திருக்கிறது.

ஆரம்பத்தில் குறித்த ஹோட்டலில் தங்குவதற்கு சென்றிருந்த அந்த நபர் சில நாட்கள் தொடர்ச்சியாக அங்கு தங்கியிருந்ததாகவும் பின்னர் சிறிது சிறிதாக பிரச்சினைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹோட்டல் உரிமையாளருக்கு சொந்தமான பிறிதொரு இடத்தில் தங்கியிருந்த அந்த நபர் திடீரென்று ஒரு நாள் தனது உடமைகளை அப்புறப்படுத்தியதுடன் அங்கேயே தங்கியிருந்துள்ளார்.

எனினும், அவர் வெளியேறிய சில மணி நேரங்களில் அந்தப் பகுதியில் தீப்பரவியதாகவும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சொந்தமான அந்த தங்குமிடத்தில் இருந்த பெறுமதியான பொருட்கள், மற்றும் அறை என்பன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. இதனால், இரண்டு மில்லியன்களுக்கும் அதிகமான சொத்துக்களை தாம் இழந்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாத்துறை கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையிலும் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியாலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு ஹோட்டல்களை நடத்தி வருவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தமது ஹோட்டலுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும், தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காகவும் இதுபோன்ற நாசகார செயல்களை தங்கியிருந்த அந்த நபர் செய்திருப்பதாக உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery