லண்டனில் சொந்த வீடு வாங்கினாரா குஷ்பு .. புகைப்படம் வைரல்

0
471

குஷ்பூ

நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார். மேலும் சீரியல்களிலும் அவர் நடித்து வருகிறார். நடிப்பு கெரியர் ஒருபக்கம் இருந்தாலும் குஷ்பூ அரசியலிலும் ஒருபக்கம் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் குஷ்பூ சமீபத்தில் லண்டனுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் செம ட்ரெண்டியான உடையில் கடைகளுக்கு சென்ற போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அவை இணையத்தில் வைரல் ஆனது.

லண்டனில் சொந்த வீடு வாங்கிட்டாரா?

இந்நிலையில் குஷ்பூ ட்விட்டரில் தனது புது வீட்டில் காபி குடிப்பதாக குறிப்பிட்டு இரண்டு போட்டோக்களை பதிவிட்டார். அதனால் அவர் லண்டனில் சொந்த வீடு வாங்கிவிட்டார் என செய்தி பரவியது.

அதற்கு கோபமாக விளக்கம் கொடுத்து இருக்கும் அவர் ‘வீட்டை வாடகைக்கும் எடுக்கலாம் என யாரும் கேள்விப்பட்டதே இல்லையா’ என அவர் கேட்டிருக்கிறார்.