யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு தமிழர் நிலம் சுவீகரிப்பு!

0
389

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்காக தமிழர்களின் நிலம் சுவீகரிக்கும் நிலையில் அந்த நிலத்தில் தென்னிலங்கையருக்கு வர்த்தக அனுமதி வழங்கப்படுவதாக வலி.வடக்கு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வரிச் சலுகை வர்த்தக நிலையங்கள் அமைப்பது தொடர்பில் நேற்று பலாலி வந்த குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் 2019 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட போதும் வெறும் 6 மாதங்களிலேயே இழுத்து மூடப்பட்டது.

இதற்கான பாதையென மக்களின் நிலத்திற்கு நடுவே நில உரிமையாளரின் அனுமதி இன்றி வீதியும் அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்காக தமிழர்களின் நிலம் சுவீகரிப்பு | Acquisition Of Tamil Land For Jaffna Airport

முன்வைத்த கோரிக்கை

இதேநேரம் விமான நிலையத்தை அண்டிய நில உரிமையாளர்களிற்கு விமான நிலையத்தை அண்டிய பகுதியில் வர்த்தக நடவடிக்கைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று 2019ஆம் ஆண்டு முன்வைத்த கோரிக்கை அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இவ்வாறான சூழலில் யாழ்ப்பாணம் விமான நிலையம் அருகே கடைத் தொகுதி அமைப்பதற்காக 4 தென்னிலங்கை நிறுவனங்கள் நேரில் வந்து பார்வையிட்டு திரும்பியுள்ளனர்.

இதன் அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் மக்களின் அபிவிருத்திப் பயன்பாட்டிற்காக என்ற பெயரில் கையகப்படுத்தியுள்ள நிலையில், அந்த நிலத்தில் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளைக்கூட நில உரிமையாளர்களிடம் வழங்கப்படாதா எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.